Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பறக்கும் காரை உருவாக்கிய உத்தராகண்ட் இளைஞர்

பறக்கும் காரை உருவாக்கிய உத்தராகண்ட் இளைஞர்

பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வுகள், பரிசோதனைகள் மற்றும் தொடர் முயற்சிகளின் பலனாகப் பறக்கும் காரின் முன்மாதிரியை உருவாக்கியுள்ளார் இளைஞர் ரவி தம்டா.

பகிரவும் WhatsApp Facebook

முறையான பொறியியல் கல்வி பயிலாமலேயே, இணையத்தின் உதவியுடன் பறக்கும் காரின் மாதிரியை உருவாக்கியுள்ளார் உத்தரா கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரவி தம்டா. பி.ஏ. பட்டதாரியான ரவி தம்டா, பேட்டரியில் இயங்கும் ஒற்றை இருக்கை கொண்ட தனது பறக்கும் காருக்கு ‘ஹபிடா ஸ்கைநெக்ஸ்’ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த பறக்கும் காரின் முன்மாதிரி கடந்த ஆகஸ்ட் மாதம் சோதனை ஓட்டத்தை நிறைவு செய்தது. ட்ரோன்களில் பயன்படுத்தப்படுவதைப் போன்ற மின் மோட்டார்கள் மற்றும் சுழலிகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கருவி, ஓடுபாதையின் உதவியின்றி செங்குத்தாக மேலெழும்பவும், தரையிறங்கவும் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், வணிக ரீதியில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அளவுக்கு இதனை மேம்படுத்துவதற்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது என்கிறார் ரவி.

உத்தரா கண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள கஃப்லிகான் மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி தம்டா. மலைப் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து சிரமங்களையும், மருத்துவ அவசர காலங்களில் நீண்ட மற்றும் வளைந்து நெளிந்த சாலைகளில் பயணிக்க வேண்டிய நிலையையும் சிறுவயது முதலே அவர் கவனித்து வந்தார். இதற்கு தீர்வு காணும் வகையில், பறக்கும் வாகனத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது. இதையடுத்து 2015-ல் தனது கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்கினார்.

முறையான ஆய்வக வசதிகளோ, விலையுயர்ந்த தொழில்நுட்பக் கருவிகளோ இல்லாத நிலையிலும், இணையத்தின் மூலம் தேவையான தகவல்களைத் திரட்டி, தனது முயற்சிகளைத் தொடர்ந்தார். பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வுகள், பரிசோதனைகள் மற்றும் தொடர் முயற்சிகளின் பலனாகப் பறக்கும் காரின் முன்மாதிரியை உருவாக்கியுள்ளார்.

அவர் ஏற்கெனவே செல்போன்களுக்கு மின்னேற்றம் அளிக்கும் காலணிகள், பார்வையற்றோர் பயன்படுத்தும் நவீன கைத்தடி, மூங்கில் வெட்டும் கருவி மற்றும் வனத் துறையினருக்கான தீயணைப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றையும் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பின்னர் வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறப்பு
அடுத்த செய்தி
Vaigai dam's rising water brings cheer to farmers

தொடர்புடைய செய்திகள்